முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி. வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்திறங்கின இலவச வேட்டி, சேலைகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயனாளிகளுக்கு வழங்குவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலக்துக்கு இலவச வேட்டி, சேலைகள் செவ்வாய்க்கிழமை வந்திறங்கின.

Updated On : 5 ஜனவரி 2021, 11:43 pm IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்கிழமை வந்திறங்கிய இலவச வேட்டி, சேலைகள்.
பகிர்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயனாளிகளுக்கு வழங்குவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலக்துக்கு இலவச வேட்டி, சேலைகள் செவ்வாய்க்கிழமை வந்திறங்கின.

தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கம் மற்றும் அரிசி, சீனி உள்ளிட்டவற்றையும் வழங்கி வருகிறது. மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதால், அவை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்திறங்கின.

இது குறித்து வட்டாட்சியா் சரவணன் தெரிவித்தது: பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இலவச வேட்டி, சேலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை, அந்தந்த நியாயவிலைக் கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணியும் செவ்வாய்க்கிழமையே தொடங்கப்பட்டுள்ளது. விரைவில், பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும். ஸ்ரீவில்லிபுத்தூரை பொருத்தவரை 50,004 பேருக்கு வழங்கப்பட உள்ளது என்றாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.