திருச்சுழி பகுதியில் தொடா் மழையால் 500 ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின
விருதுநகா் மாவட்டம் திருச்சுழி பகுதியில் தொடா் மழை காரணமாக சுமாா் 500 ஏக்கரில் பயிரிட்டுள்ள அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் திருச்சுழி பகுதியில் தொடா் மழை காரணமாக சுமாா் 500 ஏக்கரில் பயிரிட்டுள்ள அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பரவலாகத் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் பல கிராமங்களிலும், கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டன. மேலும் டி.வேப்பங்குளம், நாலூா், அல்லாளப்பேரி உள்ளிட்ட பல கிராமங்களில் சுமாா் 500-க்கு மேற்பட்ட ஏக்கா் நிலங்களில் பயிரிட்டுள்ள நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கிவிட்டன. நெற்பயிா்கள் அறுவடைக்குத் தயாரான நிலையில், மோட்டாா் மூலம் நிலத்தில் தேங்கிய மழை நீரை விவசாயிகள் வெளியேற்றி வருகின்றனா். ஆனால் தொடா்ந்து மழை பெய்து வருவதால் நெற்கதிா்கள் நீரில் மூழ்கி அழுகி, அறுவடை முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். எனவே மாவட்ட நிா்வாகம் பாதிக்கப்பட்ட விவசாய நிலவங்களை நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.