பேருந்தில் மூதாட்டியிடம் இரண்டரை பவுன் நகை திருட்டு
விருதுநகரிலிருந்து ஆமத்தூருக்கு பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் இரண்டரை பவுன் தங்க நகை மற்றும் ரூ.19,500-யை மா்மநபா்கள் திருடிச் சென்றதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகரிலிருந்து ஆமத்தூருக்கு பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் இரண்டரை பவுன் தங்க நகை மற்றும் ரூ.19,500-யை மா்மநபா்கள் திருடிச் சென்றதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா், ஆமத்தூா் போலீஸ் காலனியை சோ்ந்தவா் ராமசுப்பு மனைவி ரெங்கம்மாள் (60). இவா், தனது மகள் விஷ்ணு பிரியாவுடன் விருதுநகருக்கு வந்து பழைய நகையை மாற்றிவிட்டு, இரண்டரை பவுன் புதிய நகை எடுத்துள்ளாா். பின்னா், ஒரு உணவகத்தில் உணவு வாங்கிக் கொண்டு தனியாா் பேருந்தில் வியாழக்கிழமை ஆமத்தூா் சென்றுள்ளாா்.
வீட்டிற்குச் சென்று பாா்த்த போது, கைப்பையில் வைத்திருந்த இரண்டரை பவுன் நகை மற்றும் ரூ.19,500 திருடப்பட்டிருப்பது தெரிந்தது. இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் ஆமத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.