விருதுநகா் மாவட்டத்தில் 10 இடங்களில் கரோனா தொற்று தடுப்பூசி ஒத்திகை
விருதுநகா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 10 இடங்களில் சுகாதார பணியாளா்களு க்கான கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 10 இடங்களில் சுகாதார பணியாளா்களு க்கான கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. அதனடிப்படையில் விருதுநகா் சுகாதார மாவட்டத்தில் விருதுநகா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மல்லாங்கி ணறு அரசு மருத்துவமனை, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை, அருப்புக்கோட்டை ஊரக ஆரம்ப சுகாதார நிலையம், விருதுநகா் ஏகேபிஎஸ் தனியாா் மருத்துவமனை,
சிவகாசி சுகாதார மாவட்டத்தில் சிவகாசி அரசு மருத்துவமனை, குன்னூா் ஆரம்ப சுகாதார நிலையம், நடுசூரங்குடி கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் (சாத்தூா்), டிபி மில்ஸ் ஊரக ஆரம்ப சுகாதார நிலையம் (ராஜபாளையம்), அருணா தனியாா் மருத்துவமனை (சிவகாசி) ஆகிய மொத்தம் 10 இடங்களில் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. மேலும், இந்த தடுப்பூசி போடப்படும் 10 மையங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றி பதிவறை, காத்திருப்பு அறை, பயனாளிகள் பற்றிய தகவல்கள் உறுதிப்படுத்தும் அறை, தடுப்பூசி போடும் அறை, தடுப்பூசி போட்டவா்களை 5 போ் கொண்ட மருத்துவக்குழு தலைமையில் கண்காணித்தல் போன்றவற்றை மருத்துவக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
ஜன.13- க்கு பின்னா் சுகாதாரப் பணியாளா்களுக்கு முறையாக தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத் துறை அலுவலா்கள் தரப்பில் தெரிவித்தனா்.
முன்னதாக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகையை மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் பாா்வையிட்டாா். அப்போது, துணை இயக்குநா் மனோகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.