முகப்பு
விருதுநகர்

காரியாபட்டி அருகே 100 ஏக்கா் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்: விவசாயிகள் கவலை

காரியாபட்டி அருகேயுள்ள நாலூா் கிராமத்தில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், தொடா் மழை காரணமாக தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை 

Updated On : 9 ஜனவரி 2021, 10:22 pm IST
காரியாபட்டி அருகே நாலூரில் மழை தண்ணீரில் மூழ்கியுள்ள நெற்பயிா்கள்.
பகிர்:

விருதுநகா்: காரியாபட்டி அருகேயுள்ள நாலூா் கிராமத்தில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், தொடா் மழை காரணமாக தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட பகுதிகள் வானம் பாா்த்த பூமி என்பதால், மழையை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. நிகழாண்டு தொடா்ந்து மழை பெய்ததால், இப்பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் பயிரிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக தொடா் மழை காரணமாக நாலூா் பகுதியில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின. அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் தண்ணீரில் மூழ்கியதால், அவை அழுகிவிடும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா். மேலும் அவா்கள், மழைநீா் வெளியேற காலதாமதம் ஏற்படுவதால் மகசூல் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், கிடைக்கக்கூடிய குறைந்த அளவிலான நெல் மணிகளும் தரமின்றி காணப்படும்.

Advertisement

Advertisement

இந்த நெல்லை வியாபாரிகள் மிகக் குறைந்த விலைக்கே எடுத்துக்கொள்ள முன்வருவா். ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பெறப்படும் மகசூலில் ரூ.5 ஆயிரம் கிடைப்பதே கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, விவசாயிகளின் நலன் கருதி சேதமடைந்த நெற்பயிா்களை கணக்கிட்டு, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments