துணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
திருமாவளவன் துணை முதல்வராக வேண்டும் என அமைச்சர் வன்னி அரசு கூறியது பற்றி...
விசிக தலைவர் திருமாளவன் துணை முதல்வராக வேண்டும் என்பதே எல்லா மாவட்டத்தினரின் எதிர்பார்ப்பு என்று அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் துணை முதல்வராக வேண்டும் என சேலத்தில் சனிக்கிழமை (ஜூலை 4) நடைபெற்ற கட்சியின் செயற்குழுவில் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். மேலும், திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவளவன் போட்டியிட வேண்டும் என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களுடன் அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது, திருமாவளவன் துணை முதல்வராக வேண்டும் என்பது எல்லா மாவட்டங்களிலும் உள்ள எதிர்பார்ப்புதான். அதற்கான காலச் சூழல் வரும்போது, கட்சியின் தலைவர்கள் பேசுவார்கள்.
Advertisement
Advertisement
இதுவே எங்களைப் போன்ற தொண்டர்களின் எதிர்பார்ப்பும்கூட. இதனைத்தான் நாங்களும் விரும்புகிறோம். இருப்பினும், இது எப்படிப்பட்ட சூழ்நிலையில் உருவாகும், எங்களின் ஆசை தீரும் என்பதை காலம் சொல்லும் என்று தெரிவித்தார்.
முன்னதாக, திருச்சி கிழக்கில் தான் போட்டியிடப் போவதில்லை என திருமாவளவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
VCK Leader Thol. Thirumavalavan should become Deputy Chief Minister, says Minister Vanni Arasu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.