துணை முதல்வராக திருமாவளவன்? விசிக வலியுறுத்தல்
விசிக தலைவர் திருமாவளவன் துணை முதல்வராக வேண்டும் என கட்சியினர் கோரிக்கை விடுத்தது குறித்து...
!விசிக தலைவர் திருமாவளவன் துணை முதல்வராக வேண்டும் என வலியுறுத்தி கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்தச் செயற்குழுக் கூட்டத்தில், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், தமிழக அரசின் துணை முதல்வராகவும் திருமாவளவன் வர வேண்டும் என்றும் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, திருச்சி கிழக்கில் தான் போட்டியிடப் போவதில்லை என திருமாவளவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
VCK members demand that Thol. Thirumavalavan become Deputy Chief Minister
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.