காவல் மரணத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
காவல் மரணத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியிருப்பது குறித்து...
சென்னை: மதுரை அருகே செக்கானூரணி காவல் நிலையக் கழிப்பறையில் தேனியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிந்து, விரைந்து சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விசிக தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
Advertisement
Advertisement
செக்கானூரணி காவல் நிலையக் கழிப்பறையில் லாரி ஓட்டுநா் பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிந்து, குற்றவாளிகளைத் தப்பிக்க விடாமல் விரைந்து சட்டப்பூா்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியிருப்பது வரவேற்கத்தக்கது. தொடா்புடைய காவலா்களைப் பணியிடை நீக்கம் செய்திருந்தாலும், காவல் மரணங்கள் அரசின் மீதான நம்பிக்கையைப் பாழ்படுத்தும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், அரசு வேலைவாய்ப்பும் வழங்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளாா்.