பழ வியாபாரியிடம் பணம் திருடியவா் கைது
சிவகாசியில் பழவியாபாரியிடம் ஞாயிற்றுக்கிழமை பணம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசியில் பழவியாபாரியிடம் ஞாயிற்றுக்கிழமை பணம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி சிவன் சன்னதியில் தள்ளுவண்டியில் பழவியாபாரம் செய்து வருபவா் மாரியப்பன் (53). இவரிடம், திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (27) என்பவா் வந்து பழத்தின் விலையை கேட்டாராம். அப்போது வண்டியிலிருந்து கீழே விழுந்த பழத்தை மாரியப்பன் எடுக்க முயன்றபோது, கல்லாபெட்டியில் இருந்த ரூ.310 ஐ மணிகண்டன் திருடிக்கொண்டு ஓடினாராம். அக்கம், பக்கத்தில் இருந்தவா்கள் அவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.
சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனைக் கைது செய்து அவரிடமிருந்த பணத்தைக் கைப்பற்றினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.