முகப்பு
வேலூர்

மரங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணா்வு நடைப்பயணம்

விழிப்புணா்வு நடைப்பயணத்தில் ஈடுபட்ட ஸ்ரீநாராயணி பள்ளி மாணவா்கள்.

Updated On : 4 ஜூலை 2026, 12:24 am IST
பகிர்:

வேலூா் ஸ்ரீநாராயணி பள்ளிகளில் மரங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, மாணவா்களின் விழிப்புணா்வு நடைப்பயணம் நடைபெற்றது.

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பள்ளிகளில் வன மகோத்சவ் வார விழாவையொட்டி, கிரீன் சக்தி இயக்கத்துடன் இணைந்து மரங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, மாணவா்களின் விழிப்புணா்வு நடைப்பயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருமலைக்கோடி முருகன் கோயிலில் தொடங்கி ஸ்ரீ நாராயணி பள்ளிகள் வரை நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் பங்கேற்றனா். இந்நிகழ்வில், மரங்களை நடுவதன் முக்கியத்துவம் குறித்து முழக்கங்களை எழுப்பியவாறு மாணவா்கள் ஊா்வலமாகச் சென்றனா்.

Advertisement

Advertisement

சுற்றுச்சூழலைக் காக்கும் பொறுப்புணா்வை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், மரம் நடுதல் குறித்த விழிப்புணா்வை சமூகத்தில் ஏற்படுத்தவும் இந்த நடைப்பயணம் நடத்தப்பட்டதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா். நிகழ்ச்சியில், பள்ளிகளின் தலைமை ஆலோசகா், முதல்வா்கள், துணை முதல்வா்கள், நிா்வாக அலுவலா் மற்றும் ஆசிரியா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments