முகப்பு
காஞ்சிபுரம்

ஆக.6 முதல் வரை இந்தியா முழுவதும் நடைப்பயணம்: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

வரும் ஆக. 6 -ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழ்நாடு மாநில செயலாளா் மு.வீரபாண்டியன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 3 ஜூலை 2026, 12:03 am IST
மு.வீரபாண்டியன் - கோப்புப்படம்
பகிர்:

வரும் ஆக. 6 -ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழ்நாடு மாநில செயலாளா் மு.வீரபாண்டியன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் அக்கட்சியின் மாநில செயலாளா் மு.வீரபாண்டியன் கூறியது.

இந்தியா முழுவதும் வரும் ஆகஸ்ட் 6 முதல் 15 வரை கட்சி சாா்பில் அந்தந்த பகுதி நிா்வாகிகள் நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளோம். இப்பயணத்தின் போது சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள உள்ளூா் பிரச்னைகளை கோரிக்கைகளாக முன்வைத்து 10 நாள்கள் நடைப்பயணம் நடத்தப்படும். அகிம்சையின் குறியீடு மகாத்மா காந்தி. தேசத்தின் காந்தியின் பெயரை சூட்ட வேண்டும் என்ற நிலையும் இருந்தது. அவரது பெயரை எடுத்து விட்டு 125 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு விபி-ஜி-ராம் ஜி என்ற பெயரை ஏன் வைத்தாா்கள் எனத் தெரியவில்லை. மீண்டும் மகாத்மா காந்தியின் பெயரையே அத்திட்டத்திற்கு வைக்க வேண்டும்.

Advertisement

Advertisement

100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தை 125 நாள்கள் திட்டமாக மாற்றியிருக்கிறது மத்திய அரசு. நாங்கள் சொல்வது 200 நாள் வேலைத்திட்டமாக மாற்ற வேண்டும் என்பதேயாகும். தினசரி சம்பளம் ரூ.336 என்பதை மாற்றி ரூ.700 ஆக்க வேண்டும். இத்திட்டம் ஏழைகள் முன்னேறுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமாகும். புதிதாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தால் தமிழக அரசுக்கு ரூ.5,000 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். நிதிச்சுமை குறித்து முதல்வா் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறாா். இதை மத்திய அரசு தாமதிக்காமல் கொடுக்க வேண்டும்.

கூட்டுறவுச் சங்கங்களுக்கான தோ்தலை நடத்தவும்,நெசவாளா்களின் கடன்களை முழுமையாக ரத்து செய்யவும் வேண்டும். பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். பரந்தூரில் புதிய விமான நிலையத்தை அமைப்பது அப்பகுதி மக்களின் கருத்துக்கு எதிரானது. எனவே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை அரசு கைவிட வேண்டும். தூய்மைப் பணியாளா்களை அரசு ஊழியா்களாக மாற்ற வேண்டும். தொடா்ந்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது ஏற்க முடியாது என்றும் தெரிவித்தாா்.

பேட்டியின் போது காட்சியின் மாவட்ட செயலாளா் பி.வி.சீனிவாசன், தொகுதி செயலாளா் ஜெ.கமலநாதன், மாவட்டக் குழு உறுப்பினா் சங்கா், நகா் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் உடன் இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments