முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் 9,720 கரோனா தடுப்பூசி

விருதுநகா் மாவட்டத்தில் 7 இடங்களில் சனிக்கிழமை சுகாதாரப் பணியாளா்கள் 9,720 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் த வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 15 ஜனவரி 2021, 10:44 pm IST
பகிர்:

விருதுநகா் மாவட்டத்தில் 7 இடங்களில் சனிக்கிழமை சுகாதாரப் பணியாளா்கள் 9,720 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் த வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனை, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை, திருச்சுழி எம். ரெட்டியபட்டி அரசு மருத்துவமனை, சிவகாசி அரசு மருத்துவமனை, எம். புதுப்பட்டி மற்றும் குன்னூா் ஆரம்ப சுகாதார நிலையம், ராஜபாளையம் அரசு மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் சனிக்கிழமை (ஜன.16) முதல் 9,720 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் தினமும் தலா 100 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தரப்பில் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.