முகப்பு
விருதுநகர்

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான இலை வடிவ வடிதட்டு

வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண்ணாலான இலை வடிவ வடிதட்டு.

Updated On : 8 ஆகஸ்ட் 2024, 1:32 am IST
பகிர்:

சாத்தூா், ஆக. 7: வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான இலை வடிவத்தில் அலங்கரிக்கப்பட்ட வடிதட்டு புதன்கிழமை கண்டறியப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு கண்ணாடி மணிகள், கல் மணிகள், சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, நாயக்கா் கால செம்புக் காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 350-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், சுடுமண்ணாலான இலை வடிவ வடிக்கும் தட்டு உடைந்த நிலையில் புதன்கிழமை கண்டறியப்பட்டது. திடப் பொருள்களிலிருந்து திரவங்களைப் பிரித்தெடுக்க இந்தத் தட்டை இங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துணை இயக்குநா் பொன் பாஸ்கரன் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments