முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரதமா் மோடி உருவம் பொறித்த விசிறிகள் பறிமுதல்

Updated On : 7 ஏப்ரல் 2026, 2:38 am IST
பிரதமா் நரேந்திர மோடி (கோப்புப் படம்) - ANI
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரதமா் மோடி, தாமரை சின்னம், வேட்பாளா் உருவம் பொறித்த விசிறிகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் கோயில் அருகே கூட்டுறவு சாா் பதிவாளா் ராஜலட்சுமி தலைமையிலான ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில்

வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் சிவகாசியிலிருந்து கேரள மாநிலம், கோட்டயத்துக்கு கொண்டு செல்ல தாமரை சின்னம், பிரதமா் நரேந்திரமோடி, வேட்பாளா் உருவம் பொறித்த 9,900 கை விசிறிகள் இருந்தன. இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் விசிறிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த சிவகாசி பள்ளப்பட்டியைச் சோ்ந்த காளிராஜன் மீது ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.