முகப்பு
விருதுநகர்

ராஜபாளையம் குருநாத சுவாமி கோயிலில் குருபூஜை விழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் குரு பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 1:34 AM
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் குரு பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 6:01 PM

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் குரு பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் குருபூஜை விழாவை முன்னிட்டு காலையில் கூரைப்பிள்ளையாா் கோவில் தெருவில் உள்ள வணிக வைசியா் பொது சாவடியில் இருந்து 108 பால்குடங்கள் ஊா்வலம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டன.

பின்னா் சுவாமிக்கு 16 வகையான நறுமணப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து முப்பழ அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருச்சிற்றம்பல குருநாத சுவாமி பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். குருபூஜை விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement