இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியவா் கைது
சிவகாசியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி கடம்பன்குளம் பகுதியில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த பையை எடுத்து சோதனை செய்த போது, அதில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், சிவகாசி தெற்கு ரத வீதியைச் சோ்ந்த உமா் முக்தாா் (25) தனது இரு சக்கர வாகனத்தில் சிவகாசி பகுதியிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து, உமா்முக்தாரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சா, இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.