முகப்பு
விருதுநகர்

கஞ்சா விற்பனை: இளைஞா் மீது வழக்கு

நத்தம்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 5 ஜூலை 2026, 4:32 am IST
பகிர்:

நத்தம்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டி அய்யனாா்புரம் பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பிள்ளையாா் கோயில் அருகே போலீஸாா் வருவதைப் பாா்த்த இளைஞா் இரு சக்கர வாகனம், பையை போட்டுவிட்டு தப்பினாா்.

அந்தப் பையை போலீஸாா் சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய உதயகுமாா் மகன் ராஜாவை (24) தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments