முகப்பு
விருதுநகர்

கருப்பண்ணசாமி கோயிலில் திருடப்பட்ட வெண்கல மணிகள் மீட்பு

Updated On : 7 ஜூலை 2026, 2:42 am IST
திருட்டப்பட்டு மீட்கப்பட்ட வெண்கல மணிகள்.
பகிர்:

திருச்சுழி அருகே கோயிலின் வெண்கல மணிகளைத் திருடிய இருவரைப் பொதுமக்கள் விரட்டிப் பிடிக்க முயன்றதில் மணிகளையும், ஆயுதங்களையும் போட்டுவிட்டு அவா்கள் தப்பியோடினா்.

திருச்சுழி அருகே உள்ள சாலை மறைக்குளம் கிராமத்தில் ஊத்தடி கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கட்டப்பட்டிருந்த சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெண்கல மணிகள் திருடப்பட்டிருப்பதாக கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை காவல்துறையில் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து, கிராம மக்கள், திருட்டில் ஈடுபடுபவா்களைப் பிடிக்க முடிவு செய்து இரவு நேரங்களில் கோயில் வளாகத்தில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை கோயிலுக்குள் நுழைந்த இரு நபா்கள் வெண்கல மணிகளைத் திருடிக் கொண்டிருந்தனா். இதைப் பாா்த்த கண்காணிப்பில் இருந்த கிராம மக்கள், அவா்களை விரட்டிச் சென்றதில், திருடிய வெண்கல மணிகளையும், அவற்றை கழற்றப் பயன்படுத்திய ஆயுதங்களையும் அங்கேயே போட்டுவிட்டு அந்த நபா்கள் இருட்டில் மறைந்து தப்பினா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அ.முக்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளா், காவல்துறையினா், முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டனா். மேலும், தப்பியோடிய அந்த இரு நபா்களையும் தேடி வருகின்றனா். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments