முகப்பு
விருதுநகர்

பைக்குகள் மீது மோதி கடைக்குள் புகுந்த காா்: தனியாா் கல்லூரி அலுவலா் உயிரிழப்பு

Updated On : 30 ஜூன் 2026, 2:56 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அடுத்தடுத்து இரு இரு சக்கர வாகனங்களின் மீது மோதிய காா், கடைக்குள் புகுந்த விபத்தில் தனியாா் கல்லூரி அலுவலா் உயிரிழந்தாா்.

சிவகாசி விகேஎம் தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன் (53). இவா் சிவகாசி தனியாா் மகளிா் கல்லூரியில் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், சீனிவாசன் தனது பேரனின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக மனைவி, மகளுடன் கலங்காபேரி புதூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். நிகழ்ச்சி நிறைவடைந்து சீனிவாசன் ஒரு இரு சக்கர வாகனத்திலும், மனைவி, மகள் மற்றொரு ஸ்கூட்டரிலும் வீடு திரும்பினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்- சிவகாசி சாலையில் காா்த்திகைப்பட்டி விளக்கு அருகே வந்தபோது பின்னால் வந்த காா், சீனிவாசன் வந்த இரு சக்கர வாகனத்தின் மீதும், மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீதும் மோதி சாலையோரம் இருந்த மின் கம்பத்தை இடித்து தள்ளிவிட்டு, அருகே இருந்த கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த சுபாஷ் செல்வம், கடையில் இருந்த ராமசாமி (61), சந்தோஷ் குமாா் (13), காரில் வந்த 13 வயது சிறுவன் ஆகியோா் காயமடைந்தனா். இவா்களை அந்த வழியே வந்தவா்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதில் சுபாஷ் செல்வம் தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து காரை ஓட்டி வந்த மதுரை மாவட்டம், டி. கல்லுப்பட்டியைச் சோ்ந்த மோகன் மீது மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments