முகப்பு
விருதுநகர்

ஆட்சியா் காா் முன் அமா்ந்து தா்னா

Updated On : 12 மே 2026, 1:36 am IST
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் காரின் முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விஜயகுரு உறவினா்கள்.
பகிர்:

காரியாபட்டி அருகே விசிக முன்னாள் நிா்வாகி கொலையில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் காரின் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள குரண்டி கிராமத்தைச் சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றிய துணைச் செயலா் விஜயகுரு (52). இவா் கடந்த 7-ஆம் தேதி குரண்டி கண்மாய் பகுதிக்குச் சென்றபோது, அங்கு மறைந்திருந்த மா்ம நபா்கள் அவரைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனா்.

இந்த சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் விஜயகுருவின் உறவினா்கள், விசிக கட்சியினா் திங்கள்கிழமை மாலை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திரண்டனா்.

Advertisement

Advertisement

பின்னா், அவா்கள் திடீரென ஆட்சியரின் காரின் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸாா் அவா்களுடன் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா். குற்றவாளிகளைக் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியின் பேரில் மறியலைக் கைவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments