முகப்பு
தினமணி கதிர்

புள்ளிகள்

மகாத்மா காந்தி வார்தாவில் இருந்தபோது, லின் லித்தோ பிரபு வைஸ்ராயாக இருந்தார்.

Updated On : 28 ஜூன் 2026, 4:03 am IST
வண்ணநிலவன்
பகிர்:

மகாத்மா காந்தி வார்தாவில் இருந்தபோது, லின் லித்தோ பிரபு வைஸ்ராயாக இருந்தார். காந்திஜியுடன் பேசுவதற்காக ஒரு தொலைபேசி இணைப்பை ஆசிரமத்தில் ஏற்பாடு செய்து அளித்தார். காந்திஜி ஆசிரமவாசிகளிடம், 'வைஸ்ராய் வசதிக்காக தொலைபேசி உள்ளது. இதை யாரும் உபயோகிக்கக் கூடாது' என்றார். காந்திஜியும் அதை உபயோகிக்காமல் இருந்தார். வைஸ்ராய் அழைத்துப் பேசினால் மட்டும் பேசுவார்.

-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

ஹிந்தி இலக்கியத்தின் சிகர எழுத்தாளரான கிருஷ்ண úஸாப்திக்கு 2017-இல் ஞானபீட விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற 53-ஆவது எழுத்தாளரும், 8-ஆவது பெண் எழுத்தாளரும் ஆவார். பிரிவினைக்கு முந்தைய பாகிஸ்தானில் பிறந்த கிருஷ்ணா úஸாப்தி, பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவில் வசித்தார்.

Advertisement

Advertisement

எழுத்தாளராக இருப்பவரின் கம்பீரத்தை ஒருபோதும் விட்டுத் தராத இவர், 'என் உள் மனத் தூண்டுதலில் இருந்து என்னை மீட்டுக் கொள்வதற்காகவே நான் என்னுடைய எழுதுகோலைத் திறக்கிறேன்' என்றார்.

'சிந்தகி நாமா' எனும் நாவலுக்காக 1980-இல் சாகித்திய அகாதெமி விருது பெற்ற கிருஷ்ணா úஸாப்தி, 2010-இல் 'பத்மபூஷண்' விருதை மத்திய அரசு அறிவித்தபோது, அதை ஏற்க மறுத்துவிட்டார். 'ஒரு எழுத்தாளராக நான் என்னை நிறுவனங்களுடன் இருந்து தள்ளிவைக்கவே விரும்புகிறேன்' என்று கூறிவிட்டார்.

இவர் 4 சிறுகதை தொகுதிகளையும், 7 நாவல்களையும் வெளியிட்டுள்ளார்.

தாமிரவருணி ஒரே ஆறு என்றாலும், திருநெல்வேலிவாசிகளுக்கு ஒன்றல்ல; பாபநாசத்துக்காரருக்கு, ராஜவல்லிபுரத்துக்கு குறுகிய தாமிரவருணி, உவக்காமல் போகும்.

கொக்கிர குளத்தில் குளிக்கிறவர்களுக்கு குளிர்ச்சியும், வெள்ளக்கோயில் ஆற்றங்கரையின் அமானுஷ்ய குளியலும் வேறுவேறு. இந்த நுட்பங்களை ஓடிஓடி அனுபவித்த வண்ணநிலவனுக்கு 50 ஆண்டுகளாக எழுதித் தீர்த்தாலும், அவரின் பேனாவில் தாமிரவருணி தண்ணீர் மிச்சமிருக்கிறது. ஒவ்வொரு பருவ காலத்திலும் ஆற்றில் ஓடுகிற தண்ணீரின் மணமும், ருசியும், குறிப்பாக கோடையில் ஓடும் நீரின் முறுகிய இரும்பின் மணம், அதிகாலையில் ஆற்றில் குளிக்க வரும் கூட்டத்தைப் பகலில் வேறெங்குமே பார்க்க முடியாத ஆச்சரியம்.

'பத்து மணிக்கு உல்லாசமான வெயிலில் போடும் ஆற்றுக் குளியல்' என்று ஆற்றுப்புராணம் பாடவே இன்னொரு பிறவி தேவைப்படலாம் வண்ணநிலவனுக்கு.

(அ.வெண்ணிலா எழுதிய 'பேரன்பு ஒளிரும் சிற்றகல்' என்ற நூலில் இருந்து)

ஒருமுறை பாரதிதாசன் அணிந்திருந்த ஷெர்வாணி மீது முல்லை முத்தையா ஆசைப்பட்டார். உடனே பாரதிதாசன்அவரை கடைக்கு அழைத்துச் சென்று, பழுப்பு நிறத்தில் துணி எடுத்ததோடு, அப்போதே தையல் கலைஞரிடம் கொடுத்து, உடனடியாகத் தைக்குமாறு கூறினார். பின்னர், முல்லை முத்தையாவை அணிந்து கொள்ளச் சொல்லி, அதைப் பார்த்து அக மகிழ்ந்தார் பாரதிதாசன்.

பெரியார் ஈ.வே.ரா. தனது வாழ்நாள் முழுவதும் ராஜாஜியை ஆச்சாரியார் என்றே அழைத்தார். இருவரும் காங்கிரஸில் ஒன்றாகத் தேசத் தொண்டாற்றியவர்கள். பொது மேடைகளிலும் தனியாகப் பேசும்போதும், 'ராஜாஜி என் அரசியல் குரு' என்று ஈ.வெ.ரா. சொல்வதுண்டு. ஆச்சாரியார் என்ற பெயருக்கு 'குருநாதர்' என்று பொருள். ராஜாஜியை பெரியார் ஈ.வெ.ரா. சந்தித்தபோதெல்லாம், தனது குரு விசுவாசத்தை வெளிப்படுத்தினார். இதுபோல் ராஜாஜியும் பெரியாரை 'நாயக்கர்' என்றே சொல்வார்.

(ம.பொ.சி. எழுதிய 'ராஜாஜி' எனும் நூலில் இருந்து)

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments