முகப்பு
தினமணி கதிர்

மாயத்தீவு

இந்தியப் பெருங்கடலில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகள் உள்ளன.

Updated On : 10 மே 2026, 4:13 am IST
பகிர்:

இந்தியப் பெருங்கடலில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகள் உள்ளன. மரகதத் தீவு, மசாலா தீவு என்றெல்லாம் உண்டு. இவற்றில் ஒன்று தனது மாயாஜால வசீகரத்தால் தனித்துள்ளது. 'புவோட்டோ ரிக்கோ' என்ற இந்தத் தீவை 'உலகின் மிகப் பழைய காலனி' என அழைப்பர்.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மியாமிக்கு தென் கிழக்கே சுமார் 1,600 கி.மீ. தொலைவில், கரீபியன் கடலில் இந்தத் தீவு உள்ளது. அமெரிக்காவின் தன்னாட்சி பெற்ற இணைக்கப்படாத பிரதேசமாகும். தீவுக் கூட்டமான இங்கு மூன்று தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். இதன் அமைப்பால் 'தீவுகளின் சரம்' என அழைப்பர். வீயக்ஸ் குலேப்ரா, மோனா ஆகியன முக்கிய தீவுகளாகும்.

1200-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே டாய்னோ மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். 'நண்டுகளின் தீவு' அல்லது 'வீரர்களின் நிலம்' என்ற பொருளில் 'பேரிக்கன்' என்று முதலில் அழைக்கப்பட்டது. கொலம்பஸ் இந்தத் தீவைக் கண்டறிந்து, ஸ்பானிஷ் ஆட்சியை நிறுவ உதவியதோடு, கிறிஸ்தவ மதத்தையும் பரப்பினார். பின்னர், அந்தத் தீவு 'சான் ஜுவான்' எனப் பெயர் மாற்றப்பட்டது.

Advertisement

Advertisement

1508-இல் 'புவோட்டா ரெக்கோ' என மாறியது. இதன் பொருள் செல்வமிக்கத் துறைமுகம் என்பதாகும். ஐரோப்பியர்கள் தங்கம், வெள்ளி சுரங்கங்களை வெட்டி, அவற்றை இந்தத் துறைமுகம் வழியாக தங்கள் நாடுகளுக்குக் கொண்டு சென்றனர். இங்கு வியாபாரிகள் ஏராளமான ஆப்பிரிக்க அடிமைகளைஅழைத்து வந்து கடுமையாக உழைக்க வைத்தனர். இதனால் இந்தத் தீவு செல்வ செழிப்பில் மிதந்ததால் அந்தப் பெயரில் அழைக்கப்பட்டது.

1898-இல் ஸ்பானிஷ்-அமெரிக்கர்கள் இடையே யுத்தம் நடைபெற்றபோது, இந்தத் தீவை அமெரிக்கா கைப்பற்றியது. 1917-இல் இந்தத் தீவுவாசிகளுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது. ஆனால், இன்றும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓட்டளிக்க இந்தத் தீவில் வசிப்போருக்கு உரிமையில்லை.

அமெரிக்காவின் தேசிய வனமான 'என்.யு.என்.கி.' வனம் இங்கு உள்ளது. உயிரி ஒளிரும் விரிகுடாக்கள் இங்குள்ளன. இருட்டில் இந்த விரிகுடாவில் நீரில் வாழும் உயிரினங்கள் ஒளியை உமிழ்கின்றன. 'கோக்கு' என தவளை இனம் எழுப்பும் நூறு டெசிபள் சப்தமே இதன் பெயராகிவிட்டது.

தொடர்ச்சியாக மக்கள் வசித்துவரும் மிகப் பழமையான காலனி இது. இங்கு மற்ற இடங்களில் இல்லாத நூதன விலங்குகள், பறவைகள் உள்ளன. இப்போது 32 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments