FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

எல் நினோ விளைவு தொடங்கியது! பசிபிக் பெருங்கடலில் கடும் வெப்பம்!

எல் நினோ விளைவு தொடங்கியதால், பசிபிக் பெருங்கடலில் கடும் வெப்பம் பதிவு

Updated On : 5 ஜூன் 2026, 5:43 pm IST
கடல் பகுதிகள் - பிரதி படம் - கோப்புப்படம்.
பகிர்:

உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் எல் நினோ விளைவுகள் தொடங்கிவிட்டதாக ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பசிபிக் கடல் மேற்பரப்பில் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதே எல் நினோ எனப்படுகிறது. அதன்படி, கடந்த மே மாதத் தொடக்கத்தில், பசிபிக் கடல் நீரின் மேற்பரப்பு வெப்பம் மோசமான அளவான 0.5 சென்டிகிரேட் என்பதைத் தொட்டது. இதனால் எல் நினோ உருவானதாக அறிவிக்கப்பட்டது.

பல்வேறு வானிலை ஆய்வு மையங்களும் இந்த வெப்ப அளவானது மே மாத இறுதிக்குள் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரித்திருந்தன.

Advertisement

Advertisement

மே 24ஆம் தேதி நிலவரப்படி, இந்த வெப்பநிலை 0.67 சென்டிகிரேட் என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இன்று உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவலாக எல் நினோ விளைவு தொடங்கியிருப்பது குறித்த ஐரோப்பிய வானிலை மையம் குறுகிய கால வானிலை முன்னறிவிப்பினை வெளியிட்டது. இன்றைய பசிபிக் கடலின் நீர்மேல் பரப்பின் வெப்பம் அதிகரித்திருப்பது, எல் நினோ விளைவு தொடங்கிவிட்டதற்கான அறிகுறி என ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

summary

The El Nino effect has begun! Extreme heat in the Pacific Ocean!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments