FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எல் நினோ! தமிழகத்தில் அடுத்த 3 வாரங்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்!

எல் நினோ தாக்கல் எதிரொலியாக அடுத்த 3 வாரங்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் எனத் தகவல்.

27 செப்டம்பர் 2026, 11:10 am IST
வெப்பம் - கோப்புப்படம்
பகிர்:

எல் நினோ தாக்கல் எதிரொலியாக, தமிழ்நாட்டில் அடுத்த 3 வாரங்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் டெல்டா வெதர்மேன் என்று அறியப்படும் ஹேமச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது:

மிக தெளிவான மேகங்கள் இல்லாத செயற்கைகோள் படம். சூப்பர் எல் நினோ முதல்கட்ட தாக்கமான நீடித்த கோடை, அதித வெப்பம், இயல்பிற்கு அதிக வெப்பநிலை அடுத்த 3 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் தீவிரமாக இருக்கும்.

Advertisement

Advertisement

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பகல் நேர வெப்பநிலை இயல்பிலிருந்து 3-4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இடையிடையே இரவில் ஆங்காங்கே வெப்பச்சலன மழை பதிவானாலும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.

பொதுமக்கள் கவனத்திற்கு...

அதிகமான நீர்சத்துடைய ஆகாரங்கள், பழங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

வயது முதிர்ந்தவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள் நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

விவசாயிகள் கவனத்திற்கு...

வேளாண் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் முற்பகல், மாலை நேரத்தில் வேளாண் பணிகளை திட்டமிடுங்கள். நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலான காலக்கட்டத்தில் நேரடி வெயில் தாக்கத்தை தவிர்ப்பது நல்லது.

நேரடி நெல் விதைத்துள்ள விவசாயிகள், முளைத்து வரும் இளம் பயிர் விவசாயிகள் உடனடியாக பயிர்களுக்கு தேவையான நீரை வையுங்கள்.

செப் 29, 30ல் உள் மாவடட்ங்களில் இரவில் இடிமழை பதிவாகும். காவிரி டெல்டா மற்றும் கடலோரத்தில் பயிர் முளைப்பிற்கு ஏற்ற மழை இல்லை. எனவே தயவு செய்து தண்ணீரை இறைத்தாவது இளம் பயிரை காப்பாற்றுங்கள். உங்கள் வாய்க்காலுக்கு தண்ணீர் வரவில்லை எனில் அதிகாரிகளை தொடர்புகொண்டு தண்ணீரை கேட்டு பெற நடவடிக்கை எடுங்கள்” என்று அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

summary

Private weather analyst Hemachandran has stated that temperatures in Tamil Nadu will remain above normal for the next three weeks due to the impact of El Nino.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments