முகப்பு
மகளிர்மணி

சமையல் டிப்ஸ்: சாம்பாரில் காரம் அதிகரித்து விட்டால்...

வெஜிடபிள் சாலட் செய்யும் போது நீர் அதிகமாகிவிட்டால் நான்கைந்து பிரட் துண்டுகளை வறுத்து அதில் போடுங்கள் சரியாகிவிடும். சுவையாகவும் இருக்கும்.

Updated On : 24 மார்ச் 2021, 6:00 pm IST
பகிர்:

வெஜிடபிள் சாலட் செய்யும் போது நீர் அதிகமாகிவிட்டால் நான்கைந்து பிரட் துண்டுகளை வறுத்து அதில் போடுங்கள் சரியாகிவிடும். சுவையாகவும் இருக்கும்.

கோதுமை திரிக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக் கடலையும் சேர்த்து போட்டு திரித்தால்... சப்பாத்தியோ பூரியோ எதுவானாலும்.. சுவை, வாசனை, சத்து மூன்றும் அதிகப்படியாகும்.

கத்தரிக்காய் கூட்டோ பொறியலோ எது செய்தாலும் கொஞ்சம் கடலை மாவைத் தூவி 5 நிமிஷம் கழித்து இறக்குங்கள் மணம் கம கமவென்று இருக்கும்.

Advertisement

Advertisement

புதுசா வாங்கின அரிசி வடிக்கும் போது குழைந்துவிட்டால்  அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு விட்டால் பொல பொலவென்று இருக்கும்.

தோசை வார்க்கும் போது சரியாக வராமல் அடிப்பிடித்தால், கல்லில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு 1/2 தேக்கரண்டி உப்பை தேய்த்து சுட்டால் நன்றாக வரும். 

வெங்காய பக்கோடா செய்வது போல் பிஞ்சு வெண்டைக்காயிலும் பக்கோடா செய்யலாம். காய்களை நீளவாக்கிலோ வட்டமாகவோ அரிந்து அத்துடன் கடலைமாவு, எண்ணெய் கொஞ்சம் கலந்து பிசிறிச் செய்தால் கரகரப்பாகவும், மிக்க ருசியாகவும் இருக்கும்.

சாம்பாரில் காரம் அதிகரித்து விட்டால் சிறிது கடலைமாவை கரைத்து சேர்த்தால்  காரம் குறைந்து சரியாகிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments