உடல் சூட்டினால் வரும் வயிற்றுவலிக்கு தீர்வு!
எளிய வீட்டு வைத்திய முறைகள்...
ஆட்டுப் பாலை வடிகட்டி தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். ரத்தத்தை ஊற வைக்கும். ரத்தச் சோகையைக் குணமாக்கும்.
முட்டையின் வெள்ளைக் கருவை தழும்புகள் மீது தடவி வந்தால், அவை மறையும். எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு இரண்டையும் சம அளவு கலந்து தடவிவந்தாலும் தழும்பு மறைந்துவிடும்.
வெயில் சூட்டினால் வரும் வயிற்றுவலி குணமாக கசகசாவை மிக்ஸியில் அரைத்துப் பாலுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து பருகலாம். இது உடலைக் குளிர்ச்சியாக்கும்.
Advertisement
Advertisement
ஊறவைத்து முளைக்க வைத்த தானிய வகைகளை வாரத்துக்கு மூன்று முறையாவது சாப்பிட்டால், நரம்பு சுண்டி இழுப்பது சரியாகும்.
சளி, இருமல், ஒற்றைத் தலைவலி, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, பித்தக் கிறுகிறுப்பு உள்ளிட்ட பல நோய்களைத் தீர்ப்பதற்கு கொத்துமல்லி விதை உதவும்.
சர்க்கரை நோயாளியின் மருந்து பொக்கிஷம் பாகற்காய். வாலிபம் தொடங்கி, பாகற்காய் சாப்பிட்டு வருபவர்களுக்கு நரை, திரை ஏற்படாது.