முகப்பு
மகளிர்மணி

தினமும் காலை நெல்லிக்காய் ஜூஸ் அருந்தினால்...

தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் அருந்தினால், கொழுப்பு கரையும்.

Updated On : 10 மே 2026, 4:05 am IST
பகிர்:

தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் அருந்தினால், கொழுப்பு கரையும். நெல்லிக்காயுடன் இஞ்சிச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து குடித்தால் மேலும் சுவையாக இருப்பதோடு, உடலுக்கும் நன்மையளிக்கும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டாலும் அல்லது அதன் சாறை 100 மில்லி அளவு அருந்தி வந்தாலும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உடலில் எந்த நோயும் வராது.

இஞ்சியை ஜூஸ் செய்தோ, துவையல் செய்தோ சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம், இதய நோய்கள், செரிமான பிரச்னைகள் வராது.

Advertisement

Advertisement

வாதத்தால் ஏற்படும் மூட்டு நோய்களுக்கு ஒரு தேக்கரண்டி மீன் எண்ணெய் சாப்பிட்டு வந்தால், அவை குணமாகும்.

கீரையை வேக வைக்கும் தண்ணீரில் சிறிது உப்பை கரைத்து, அதன் பின்னர் வேக வைத்தால் கீரையின் மணமும் நிறமும் அருமையாக இருக்கும்.

வெண்டைக்காயை வதக்குவதற்கு முன்னர் ஒரு தேக்கரண்டி புளித்த மோரை சேர்த்தால், மொறுமொறுவென்று இருக்கும்.

வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி, தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து எடுத்து நறுக்கினால் கண்ணீர் வராது.

ஒரு தேக்கரண்டி கடலை எண்ணெய் அல்லது இரண்டு பல் பூண்டு சேர்த்து பருப்பை வேக வைத்தால், சீக்கிரம் வெந்துவிடும்.

துவரம் பருப்பு துவையல் தயாரிக்கும்போது சிறிது கொள்ளையும் வறுத்துச் சேர்த்து அரைத்தால், மணமாகவும் சுவையாகவும் இருக்கும். விருப்பப்பட்டால் பூண்டையும் சேர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments