முகப்பு
சிறுவர்மணி

முத்துக் கதை: பலே திருடன்

அந்த ரயில் பெட்டியில் இரண்டு பேர்கள் மட்டுமே பயணம் செய்து கொண்டிருந்தார்கள். ஒருவர் ஒரு வியாபாரி. இன்னொருவன் திருடன். திருடன் வெளியூருக்குச் செல்லப் பெட்டியுடன் வந்திருந்தான்.

Updated On : 28 ஆகஸ்ட் 2015, 8:20 pm IST
பகிர்:

அந்த ரயில் பெட்டியில் இரண்டு பேர்கள் மட்டுமே பயணம் செய்து கொண்டிருந்தார்கள். ஒருவர் ஒரு வியாபாரி. இன்னொருவன் திருடன். திருடன் வெளியூருக்குச் செல்லப் பெட்டியுடன் வந்திருந்தான். வியாபாரி தன்னிடமிருந்த ஒரு சிறு பையிலிருந்த பணத்தை வெளியே எடுத்து எண்ணிக் கொண்டிருந்தார். அதைக் கண்ட திருடன் வியாபாரி தூங்கியவுடன் பணத்தை எடுத்துக்கொண்டு அடுத்த ஊரில் இறங்கிவிட வேண்டுமென்று நினைத்தபடி வியாபாரி தூங்கட்டும் என்று நினைத்துப் படுத்துவிட்டான். சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டான். நள்ளிரவில் திடுக்கிட்டு விழித்த திருடன் வியாபாரி தூங்குவதைக் கண்டு எழுந்தான்.

வியாபாரியின் தலைமாட்டிலும், அவரைச் சுற்றியுள்ள இடங்களிலும் தேடினான். பணமோ பணம் வைத்திருந்த பையையோ காணவில்லை. ஏமாற்றத்தோடு படுத்துவிட்டான். அதிகாலையில் விழித்தான். வியாபாரி தூங்கிக் கொண்டிருந்தார். பாத்ரூம் சென்று விட்டுத் திரும்பி வந்தான் திருடன். வியாபாரி பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். திருடனுக்கு மிகவும் ஆச்சரியம். இவன் பணத்தை எங்கே வைத்திருந்தான் என்று திகைத்தான்.

""ரயிலில் திருடர் பயம் அதிகம். பணத்தை எங்கே பத்திரமாக வைத்திருந்தீர்கள்?'' என்று வியாபாரியிடம் கேட்டான். வியாபாரி மிக அமைதியாக, ""நேற்று நான் பணத்தை எண்ணிப் பார்த்தபோது நீ பார்த்த பார்வை சரியில்லை. இரவு எப்படியும் என்னை சோதனையிட்டுப் பணத்தை எடுத்து விடுவாய் என்று நான் நினைத்தேன். இரவு என்னை நீ புரட்டிப் பார்த்ததும் எனக்குத் தெரியும். அதனால் பணப் பையை உன் தலைமாட்டிலிருந்த பெட்டியின் அடியில் வைத்து விட்டேன். என்னைச் சோதனையிட்டதைப்போல் உன் பொருளைச் சோதனை இட மாட்டாய் என்று நினைத்து நான் செய்தது எனக்கு நல்லதாகப் போயிற்று'' என்று கூறி கடகடவென்று சிரித்தார் அந்த வியாபாரி.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments