FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அசத்தும் சிறுமி!

சதுரங்கம், மாறுவேடம், கதை சொல்லுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் அசத்தி வருகிறார் அ.பி.ஜனனிகா.

7 மார்ச் 2026, 8:05 pm IST
பகிர்:

சதுரங்கம், மாறுவேடம், கதை சொல்லுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் அசத்தி வருகிறார் அ.பி.ஜனனிகா. காரைக்குடி குறிஞ்சி கண்மாயில் வசித்து வரும் அ.பிரபு-ச.சரண்யா தம்பதியின் மகளான ஜனனிகா, தனியார் பள்ளியில் பயின்றுவருகிறார். இவரது வெற்றி குறித்து சரண்யா கூறியது:

'ஜனனிகாவுக்கு அறிவு சார்ந்த விளையாட்டைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதனால் சதுரங்கப் போட்டிகளை தொலைக்காட்சி, இணையம் வழியாகப் பார்த்தேன்.

கரோனா காலத்தில், சதுரங்கப் போட்டியை தீவிரமாக ஜனனிகாவுக்குப் பயிற்றுவித்தேன். நன்றாகப் பயிற்சி பெற்றவுடன் ஜனனிகா சதுரங்கப் பயணத்தை ஆறாவது வயதில் தொடங்கினாள். சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் 3 முறையும், மாநில அளவில் போட்டியில் சிறப்பிடமும் பெற்றார்.

Advertisement

Advertisement

இலங்கையில் நடைபெற்ற போட்டியில் 9 ரைபிடு, பிளிட்ஸ் ஆகிய இரண்டிலும் சாம்பியன் பட்டமும், ஒரு போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.

யு.கே.ஜி. படிக்கும்போது, அப்துல் கலாமின் பொன்மொழிகளைப் பற்றி இடைவிடாமல் பேசி பரிசு பெற்றார்.

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடந்த கதை சொல்லுதல் போட்டி, கோவில்பட்டி ஏசியா கேன்டி நடத்திய இணைய வழிப் பேச்சுப் போட்டி, ஜேம்ஸ் அன் கோ மதுரையில் நடத்திய மாறுவேடப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும், பரிசுத் தொகையும் பெற்றுள்ளார்.

எனது மகன் ஹனீஸ் நவிழன் எல்.கே.ஜி. படிக்கிறார்'' என்கிறார் ச.சரண்யா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments