முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

இளநீர் சர்பத்!

வெயிலுக்கு இளநீர் குடிக்கலாம்; சர்பத் குடிக்கலாம்; இளநீர் சர்பத்?  வித்தியாசமான உணவு அனுபவங்களுக்குப் பெயர் பெற்ற மதுரைக்காரர்களின் சேட்டைதான் இதுவும். மதுரைத் தமிழ்ச் சங்கச் சாலையில் ஒரு சின்ன இடத்தி

Updated On : 20 செப்டம்பர் 2012, 10:22 pm IST
பகிர்:

வெயிலுக்கு இளநீர் குடிக்கலாம்; சர்பத் குடிக்கலாம்; இளநீர் சர்பத்?

 வித்தியாசமான உணவு அனுபவங்களுக்குப் பெயர் பெற்ற மதுரைக்காரர்களின் சேட்டைதான் இதுவும். மதுரைத் தமிழ்ச் சங்கச் சாலையில் ஒரு சின்ன இடத்தில் இந்த இளநீர் சர்பத் கிடைக்கிறது. அது என்ன இளநீர் சர்பத்? முதலில் இளநீரை உடைத்து தம்ளரில் இளநீரை நிரப்புகிறார்கள். அடுத்து, தேங்காய் வழுக்கையை நன்கு சிதைத்து அதில் கலக்குகிறார்கள். அப்புறம் நன்னாரி சர்பத் ஒரு கரண்டி. அவ்வளவே.

  ருசி?

Advertisement

Advertisement

 கடைக்கு வெளியே எப்போதும் நிற்கும் கூட்டமே சாட்சி. ஏறத்தாழ 40 ஆண்டு காலமாக இந்த இளநீர் சர்பத்தின் ருசி மதுரைக்காரர்களைக் கட்டிப்போட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். கடைக்காரர் ராமன் ரவியை ûûநைமது புகைப்படக்காரர் படம் எடுத்ததையறிந்ததும் பதறுகிறார். ""சார், பேப்பர்காரவங்களா? போட்டுடாதீங்க சார்... நான் ஒண்டியாள் சார். கூட்டத்தோட ஏற்கனவே மல்லுகட்ட முடியல சார்... சார்...''

  இது எப்படி இருக்கு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments