ஞாயிறு கொண்டாட்டம்

தலைநிமிரும் தலைநகரம்!

தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த சென்னை தற்போது மெதுவாக மெதுவாக தலை நிமிர ஆரம்பித்து இருக்கிறது. அதற்கு உதாரணம் தான் சென்னை கிண்டி கத்திபாரா சந்திப்பு.

வனராஜன்

தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த சென்னை தற்போது மெதுவாக மெதுவாக தலை நிமிர ஆரம்பித்து இருக்கிறது. அதற்கு உதாரணம் தான் சென்னை கிண்டி கத்திபாரா சந்திப்பு.

சென்னை பெருநகரின் முக்கிய நுழைவு வாயிலில்  ஒன்று கிண்டி கத்திபாரா சந்திப்பு. சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையிலும், அண்ணாசாலை, ஜி.எஸ்.டி சாலை, பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு சாலைகளை இணைக்கும் விதமாக 2008-ஆம் ஆண்டு கட்டப்பட்டது இந்த கத்திபாரா சந்திப்பு. இப்போது சென்னையின் முக்கிய அடையாளமாக மாறிவிட்டது. காரணம் முதல் நகர்ப்புற சதுக்கம் இங்குதான் அமைந்துள்ளது என்பது தனிச்சிறப்பான விஷயமாகும்.

இந்த பாலத்தின் கீழ் உள்ள 5.38 சதுரடி பரப்பளவுள்ள நிலம்,  நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு முதல் பகுதியில் திறந்தவெளி உணவகமும், இரண்டாவது   பேருந்துகள் வந்து  செல்ல வசதியாக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. 

மூன்றாவது பகுதியில் ஷேர் ஆட்டோக்கள் வந்து செல்ல வசதியாகவும், நான்காவது பகுதியில் போரூர் மார்க்கமாக செல்லும் பேருந்து வந்து செல்லவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தொலைதூரங்களில் இருந்து வரும் அரசு விரைவு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் செல்ல வசதியாக பாலத்தின் அடியில் சுரங்கபாதை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வணிக வளாகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வந்து செல்ல வசதியாக 50 கார், 200 இரு சக்கர வாகனம் நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளன.

சிறுவர் விளையாடுவதற்காக பூங்காவும், விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வயதானவர்கள் வாக்கிங் செல்ல நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது.

அ முதல் ஃ வரை தமிழ் எழுத்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் தூண்கள், சுவர்களில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு கண்களுக்கு விருந்தளிக்கின்றன. நான்கு பகுதிகளிலும் 7 ஆயிரம் செடிகள் நடப்பட்டுள்ளன.

பொதுமக்களின் சிலரின் கருத்தை கேட்ட போது சொன்னார்கள்:

"பாலத்தின் கீழ் அரசியல் கட்சிகளின் விளம்பரமும், போஸ்டர்களும் தான் ஆக்கிரமித்து இருக்கும். மழை காலங்களில் இங்கு தண்ணீர் அதிகம் தேங்கும். அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் இப்போது வண்ணமயமாக காட்சியளிக்கிறது. சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்களும், தமிழ் எழுத்துகளும் பார்ப்பவர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி இந்த நகர்ப்பு சதுக்கத்தை சிறப்பான முறையில் பராமரித்து சென்னைக்கு கூடுதல் பெருமை சேர்க்கும்' என்றார்கள்.

கத்திபாரா சந்திப்பின் புதுப்பொலிவால் சென்னை  வண்ண ஓவியங்களாலும், ஒளி வெள்ளத்தாலும் ஜொலிக்க ஆரம்பித்துள்ளது. மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையின் இந்த நடவடிக்கையால் சென்னை பொலிவு பெற்று சர்வதேச நகரங்களுக்கு இணையாக காட்சியளிக்கிறது. 

படங்கள்: சாய் வெங்கடேஷ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

SCROLL FOR NEXT