முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கண்கவர் கலைவண்ணம்

சென்னை பழவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் பினோ ஸாஜன். ஐஸ் குச்சியால் பல்வேறு கலைபடைப்புகளை உருவாக்கியிருக்கிறார்.

Updated On : 10 அக்டோபர் 2021, 6:00 am IST
பகிர்:

சென்னை பழவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் பினோ ஸாஜன். ஐஸ் குச்சியால் பல்வேறு கலைபடைப்புகளை உருவாக்கியிருக்கிறார். தான் உருவாக்கிய பொருள்களை கொண்டு தனியாக அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இது பற்றி அவரிடம் கேட்ட போது சொன்னார்:

""கலை படைப்புகள் மனித உணர்வுகளை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்து
பவை. எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தொழில் ரீதியாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிறு தொழில் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறேன். எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் தெர்மாகோல் மூலம் சிறுவயதில் ஏதாவது பொருள்களை செய்து அழகு பார்ப்பேன். சமீபமாக ஐஸ் குச்சியால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இணையம் மூலமாக தேடலில் இறங்கிய போது வெளிநாட்டில் ஒருவர் டூத் பிக் மூலம் சாதனை படைத்திருப்பது தெரியவந்தது. எனவே அதிலிருந்து வித்தியாசமான முயற்சியில் இறங்குவோம் என்ற நோக்கில் 3எம்எம் டூத்பிக் குச்சியால் பல்வேறு கலைபடைப்புகளை உருவாக்கியிருக்கிறேன்.

குறிப்பாக உலக அதிசயங்கள்,  பைக், கப்பல்  என பல பொருட்களை உருவாக்கினேன்.  இனி வரும் காலங்களில் ஏராளமான படைப்புகளை உருவாக்க வேண்டும். இளைய தலைமுறையினருக்கு என்னால் முடிந்த பயிற்சிகளை அளிக்க வேண்டும். மேலும் இந்த கலைபொருட்களை கொண்டு நடமாடும் அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே என் எண்ணம்'' என்கிறார் பினோ. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments