ஜாலியா இருந்த ஒருத்தன் டீசர் வெளியீட்டுத் தேதி!
ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் டீசர் வெளியிடவுள்ள தேதி குறித்து...
ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் டீசர் நாளை (ஜூன் 21) காலை 11.11-க்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஜீவா நடிப்பில் உருவாகும் இந்த 47-வது படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி திரைப்படம் ஜீவாவுக்குப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
சிவா மனசுல சக்தி திரைப்படம் வெளியாகி சுமார் 16 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி அமைந்தது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைப் பெரிதாக்கியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஜாலியா இருந்த ஒருத்தன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில், புகழ்பெற்ற யூ டியூபரான பரிதாபங்கள் கோபி, இவானா, ரெத்திகா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்டிரங்களின் நடித்துள்ளனர்.
ஜீவா நடிப்பில் கடைசியாக வெளியான, தலைவர் தம்பி தலைமையில் படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரசிகர்களாலும் பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The film crew has announced that the teaser for Jiiva's Jaliya Irundha Oruthan will be released tomorrow (June 21).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.