ஞாயிறு கொண்டாட்டம்

இந்தியா முழுவதும் படப்பிடிப்பு

சிவ நிர்வானா  இயக்கத்தில்  விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் "குஷி'.

DIN

சிவ நிர்வானா  இயக்கத்தில்  விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் "குஷி'. ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல்லா வஹாப் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது. செப்டம்பர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.  இந்த நிலையில் படத்தின் பாடல்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

இயக்குநர் சிவ நிர்வானா பேசுகையில், "" குஷி' பயணம் தொடங்கி இரண்டு ஆண்டுகளாகிறது. உணர்வுபூர்வமான தருணங்கள். கலவையான உணர்வுகள். இந்தியா முழுவதும் பயணித்து மலை வாசஸ்தலங்கள், பனி பிரதேசங்கள் என வெவ்வேறு நிலவியல் அமைப்புகளில் பணியாற்றிய வித்தியாசமான அனுபவம். இவையனைத்திலும் விஜய் தேவரகொண்டா, தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்கினார்கள். எனது இயக்கத்தில் 2019 -  ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் "மஜிலி' வெளியானது. அதன் பிறகு  இப்போது குஷி வெளியாகிறது. இடைப்பட்ட காலத்தில் ரசிகர்களை திரையரங்குகளில் சந்திக்கும் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறேன். ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதற்காக தான் குஷியை உருவாக்கி இருக்கிறோம்'' என்றார் சிவ நிர்வானா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT