முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

டிவைன் ஹார்ட்ஸ்...

உலக அளவிலான அரசு சாரா தன்னார்வ இயக்கமான ரோட்டரி சங்கத்தில் முதன்முறையாக மாற்றுத்திறன் கொண்ட பலரும் ஒன்றிணைந்து 'டிவைன் ஹார்ட்ஸ்' என்ற பெயரில் சேலத்தில் புதுமையான ரோட்டரி சங்கத்தைத் தொடங்கியுள்ளனர்.

Updated On : 12 ஏப்ரல் 2026, 4:04 am IST
பகிர்:

பெ.பெரியார்மன்னன்

உலக அளவிலான அரசு சாரா தன்னார்வ இயக்கமான ரோட்டரி சங்கத்தில் முதன்முறையாக மாற்றுத்திறன் கொண்ட பலரும் ஒன்றிணைந்து 'டிவைன் ஹார்ட்ஸ்' என்ற பெயரில் சேலத்தில் புதுமையான ரோட்டரி சங்கத்தைத் தொடங்கியுள்ளனர்.

சாமானியர்களுக்கு உதவும் நோக்கில் இந்தச் சங்கத்தைத் தொடங்கியுள்ள சாசனத் தலைவர் மணிகண்டனிடம் பேசியபோது:

Advertisement

Advertisement

'பார்வைக் குறைபாடு, மாற்றுத்திறன் கொண்ட நான் பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து சேவையாற்றி வருகிறேன்.

சேலம் ஜிம்கானா ரோட்டரி சங்கத்தின் வாயிலாக, மாற்றுத்திறன் கொண்ட 16 பேர் ஒன்றிணைந்து 'டிவைன் ஹார்ட்ஸ்' என்ற பெயரில் ரோட்டரி சங்கத்தைத் தொடங்கினோம். நான் சாசனத் தலைவராகவும், ஜாகீர் உசேன் செயலாளராகவும், விஜயகுமார் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். இந்த முயற்சி மாற்றுத்திறன் கொண்டவர்களும் சமூகத்துக்குத் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்க முடியும் என்பதை வெளிப்படுத்தும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

ரோட்டரி சங்க பன்னாட்டு இயக்குநர் முருகானந்தம், மாவட்ட ஆளுநர் சிவசுந்தரம், உதவி ஆளுநர் வசுமதி, ஜிம்கானா ரோட்டரி சங்கத் தலைவர் காமராஜ் உள்ளிட்டோர் இதற்கு வழிகாட்டினர். இந்த நிகழ்வானது மாற்றுத்திறனாளிகளின் மீதான சமூகப் பார்வையை மாற்றி அமைத்துள்ளது.

ஏழைகள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவோம். கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் சார்ந்த உதவிகளை அளிக்கப் பாடுபடுவோம். தொற்றுநோய் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களிலும் பங்கேற்று உதவுவோம்' என்கிறார் மணிகண்டன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments