ஆயிரம் பாடல்கள்
திரைப்படப் பாடலாசிரியர் ஏ.ரமணிகாந்தன் இன்று தனது பாடல் வரிகள், எழுத்தின் வழியே தமிழ் வாசகர்களை, ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
திரைப்படப் பாடலாசிரியர் ஏ.ரமணிகாந்தன் இன்று தனது பாடல் வரிகள், எழுத்தின் வழியே தமிழ் வாசகர்களை, ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறார். காதல் ததும்ப, துள்ளல் தழைக்க, ஏக்கம் வெளிப்பட, தத்துவம் மயக்க, இயற்கை இனிக்க, உறவுகள் துளிர்க்க, சோகம் வலிக்க என வாழ்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பாடல்களின் தொகுப்பாக அவர் ஆயிரம் பாடல்களைத் தொட்டு இருக்கிறார்.
திரைப்பட இயக்குநர்கள் தங்கள் திரைப்படத்தின் சூழலுக்குத் தேவையான அனைத்துப் பாடல்களையும் முன்கூட்டியே தேர்வு செய்யும் ஆயத்தப் பாடல்களாக இசைவடிவம் பெற்றுள்ளதே இப்பாடல்களின் சிறப்பாகும்.
இவர் தனது மெட்டுக்களோடு கூடிய பாடல் வரிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிக மிக சிறப்பான இசை வடிவத்தை வார்த்து கொடுத்து இருக்கிறார். இம்முயற்சி திரைத் துறையினருக்கு ஒரு பெரும் வரப்பிரசாதமாகும். இனிக்கும் அழகான பாடல்களை பாடலாசிரியரின் இத்தொகுப்பு மூலம் நாம் கேட்டு மகிழலாம்.
Advertisement
Advertisement
'இந்தப் பயணத்தில் காலமும் வாழ்க்கையும் கற்றுத் தந்திருப்பவை ஏராளம். மனிதர்களின் அன்புக்கும் வாழ்க்கையின் அருளுக்கும் என்றும் நன்றி. வாய்ப்பளித்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடிய பாடகர்கள், பத்திகள் பல எழுதிப் பரவலாகக் கொண்டு சேர்ந்த பத்திரிகையாளர்கள், பாடல்களில் கவிதை செய்ய விழையும் என் போன்றோர்க்குப் பெரும் ஊக்கமளித்து வரவேற்கும் மக்கள் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.'' என்றார் ரமணிகாந்தன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.