இலக்கியப் பொன்மொழிகள்
ஆபத்துக் காலத்தில் பெற்றோர்க்கு உதவி செய்யாத பிள்ளை, கடும் பசியால் வாடும்போது, அப்பசியைப் போக்கிக் கொள்வதற்குக் கிடைக்காத உணவு, தாகமாக இருக்கும்போது அதைத் தணிக்க உதவாத தண்ணீர், வறுமையை உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்ளாத பெண்கள், கோபத்தை அடக்கி ஆளாத அரசன், குருவின் உபதேசத்தைக் கேட்டு, அதன்படி நடக்காத சீடன், பாவத்தைத் தீர்க்காத புண்ணியத் தீர்த்தம் - இவை ஏழினாலும் மனிதனுக்கு எந்தவொரு பயனும் இல்லை.
ஆபத்துக்கு உதவாத ஏழு!

ஆபத்துக் குதவாப் பிள்ளை
Advertisement
Advertisement
அரும்பசிக் குதவா அன்னம்
தாகத்தைத் தீராத் தண்ணீர்
தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன்
குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம்
பயனில்லை ஏழும் தானே!
(விவேக சிந்தாமணி-2)