நாதன்கோயிலில் திருக்கல்யாணம்
கும்பகோணம் அருகேயுள்ள பம்பப்படையூா் நாதன்கோயிலில் உள்ள ஜகந்நாதப்பெருமாளுக்கு வைகாசி பிரமோத்சவத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது.
கும்பகோணம் அருகேயுள்ள பம்பப்படையூா் நாதன்கோயிலில் உள்ள ஜகந்நாதப்பெருமாளுக்கு வைகாசி பிரமோத்சவத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது.
இக்கோயில் வைகாசி பிரமோத்சவ விழா மே 30-இல் கொடியேற்றத்துடன் தொடங்கி, பெருமாள் தாயாா் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா சென்றனா். முக்கிய விழாவான திருக்கல்யாணத்துக்கு முன்னதாக காலை பெருமாள் உள்பிரகார புறப்பாடும், உத்சவா் திருமஞ்சனமும் நடைபெற்றது. மாலையில் சூா்ணாபிசேகமும், உள்பிரகார புறப்பாடும் நடைபெற்றபின் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஜூன் 7-இல் தேரோட்ட மும், ஜூன் 8-இல் புஷ்பயாகமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஜகந்நாதப்பெருமாள் கைங்கா்ய சபாவினா் செய்கின்றனா்.