முகப்பு
தமிழ்மணி

காற்றால் கிளைக்குமா மாமரம்?

காற்றினால் மாமரத்தில் கிளைகள் தோன்றுவதாக அகநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகிறது. ""வளியொடு சினைஇய வண்டளிர் மாஅத்துக்/ கிளிபோற் காய'' (அகம்37:7). காற்றால் கிளைத்த கொழுவிய தளிர்களையுடைய மாமரத்தில் கிளி(மூக்கு) போன்ற காய்களைக் கொண்ட என்பது இதன் பொருள்.

Updated On : 15 பிப்ரவரி 2015, 3:05 am IST
பகிர்:

காற்றினால் மாமரத்தில் கிளைகள் தோன்றுவதாக அகநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகிறது. ""வளியொடு சினைஇய வண்டளிர் மாஅத்துக்/ கிளிபோற் காய'' (அகம்37:7). காற்றால் கிளைத்த கொழுவிய தளிர்களையுடைய மாமரத்தில் கிளி(மூக்கு) போன்ற காய்களைக் கொண்ட என்பது இதன் பொருள். ""வளியொடு சினைஇய வண்தளிர் மா'' என்ற அடியில் சினைஇய என்றால், கிளைவிட்ட என்று பொருள். அப்படியென்றால், காற்றொடு சினைஇய எனப் புலவர் சொல்வது ஏன்?

"காற்றொடு சினைஇய' என்ற தொடருக்கு, உரைகளில் பல்வேறான பொருள்கள் கூறப்படுகின்றன. காற்றினால் கிளைத்த; காற்றடிக்கப் பூத்த; தென்றற் காற்றால் தோற்றுவிக்கப்பெற்ற - தளிர்களையுடைய என்பன அவற்றுள் சில. ஆனால், தென்றல் காற்று எவ்வாறு தளிர்களை - பூக்களைத் தோற்றுவிக்கும் என்ற விளக்கம் ஒரு நூலிலும் இல்லை.

ஒட்டு மாங்கனியை உருவாக்குவது (எழ்ஹச்ற்ண்ய்ஞ்) எவ்வாறு என்று விளக்கும் ஒரு கட்டுரையில்(ஏர்ஜ் ற்ர் ஞ்ழ்ர்ஜ் ம்ஹய்ஞ்ர் ற்ழ்ங்ங்ள்?), மாமரங்கள் இயற்கையிலேயே ஒட்டு இனத்தை உருவாக்குபவை என்ற செய்தி இணையதளம் ஒன்றில் (ட்ற்ற்ல்:ஜ்ஜ்ஜ்.ற்ழ்ர்ல்ண்ஸ்ரீஹப்ழ்ஹண்ய்ச்ப்ர்ழ்ண்ள்ற்.ஸ்ரீர்ம்ம்ஹய்ஞ்ர்ற்ழ்ங்ங்ள்.ட்ற்ம்) கிடைத்தது. இரண்டு மா மரங்கள் அருகருகே வளரும்போது, காற்றினால் அவற்றின் கிளைகள் தொடர்ந்து உரசிக்கொண்டிருக்குமானால், அதனால் ஒருவிதப் பசை உருவாகி, அக்கிளைகள் ஒட்டிக்கொள்ளும்; காற்று நின்ற பின்னர் அந்த இடத்தினின்றும் புதிய கிளை உருவாகும் என்பதுதான் அச்செய்தி. இப்படிப்பட்ட ஒரு நிகழ்வினால் உருவான கிளையையே புலவர் குறிப்பிடுகிறார் என்பது தெளிவு.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.