கடும் சொற்களையும் பொறுத்துக் கொள்வர்
மந்திரித்து இட்ட திருநீற்றினால் படம் அடங்கின நாகப் பாம்பைப் போலத் தங்கள் தங்கள் குடிமையின் தகுதி காரணமாக வருத்தப்பட்டுக் கயவர் வாயினின்றும் வந்து கல்லால் எறிந்தது போலத் தாக்குகின்ற...
கல்லெறிந்த தன்ன கயவர்வாய் இன்னாச் சொல்
எல்லாருங் காணப் பொறுத்து, உய்ப்பர்}ஒல்லை
இடுநீற்றாங் பையவிந்த நாகம்போல், தத்தம்
Advertisement
Advertisement
குடிமையான் வாதிக்கப் பட்டு.
(பாடல் 66 அதிகாரம்: சினம் இன்மை)
மந்திரித்து இட்ட திருநீற்றினால் படம் அடங்கின நாகப் பாம்பைப் போலத் தங்கள் தங்கள் குடிமையின் தகுதி காரணமாக வருத்தப்பட்டுக் கயவர் வாயினின்றும் வந்து கல்லால் எறிந்தது போலத் தாக்குகின்ற கொடுமையான சொற்களையும், யாவரும் காணும்படியாகப் பொறுத்துத் தமது தகுதியை நிலைபெறுத்துவார்கள் சான்றோர்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.