முகப்பு
வெள்ளிமணி

ஏழில் மூன்றானவன்!

செங்கல்பட்டை அடுத்த ஆத்தூர் கிராமத்தில் மிகப் பழைமை வாய்ந்த சிவத்தலம் அருள்மிகு முக்தீஸ்வரர் (முக்தபுரீஸ்வரர்) கோயில். முக்தீஸ்வரர் கோயிலைச் சுற்றி ஏழு சிவலிங்கத் திருமேனிகள் கிடைக்கப்பெற்றன.

Updated On : 2 ஆகஸ்ட் 2013, 12:34 pm IST
பகிர்:

செங்கல்பட்டை அடுத்த ஆத்தூர் கிராமத்தில் மிகப் பழைமை வாய்ந்த சிவத்தலம் அருள்மிகு முக்தீஸ்வரர் (முக்தபுரீஸ்வரர்) கோயில். முக்தீஸ்வரர் கோயிலைச் சுற்றி ஏழு சிவலிங்கத் திருமேனிகள் கிடைக்கப்பெற்றன. அவற்றுள் மூன்றாவது சிவலிங்கம் ஆத்தூர் வடபாதி கிராமத்தில் ஈசான பாகத்தில் அரிதாகக் காணப்படுகின்ற அருள்மிகு ஆதிசக்தி உடனாய ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோயில். இத்தலம் 1000 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு, சோழர்கள் காலத்தில் சீரும் சிறப்புடனும் விளங்கியுள்ளது. கால சுழற்சியினாலும், அந்நிய சமயத்தினராலும் மூலவ மூர்த்திகள் மட்டுமே நிலைத்து நின்றும், மற்ற மூர்த்தங்களும், தலமும் கண்ணுறாமல் போயின.

இந்நிலையில், சிவனடியார்களின் பேருதவியால் ஆலயம் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டு 2008-ஆம் ஆண்டு திருக்குடமுழுக்கு நடைபெற்று தொடர்ந்து அன்றாட பூஜைகளும் பிரதோஷ சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

ஆதிலிங்கேஸ்வரர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மேற்கு நோக்கி அமையப்பெற்றுள்ள ஈசன் "உடல்நோய் தீர்ப்பார்' என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் அன்பர்களால் தேவார-திருவாசகங்கள் ஓதப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இத்திருக்கோயிலில் தற்போது ராஜகோபுரம் மற்றும் மூலவர் விமானம் ஆகியவற்றுக்கு வண்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், இக்கோயிலின் குடமுழுக்கை வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments