இராக்கில் குண்டு வெடித்து 8 பேர் சாவு
இராக்கின் திக்ரித் நகரில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு அருகே திங்கள்கிழமை காலை ஒரு டேங்கர்
இராக்கின் திக்ரித் நகரில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு அருகே திங்கள்கிழமை காலை ஒரு டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 8 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் போலீஸார் ஆவர்.
தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் இந்த வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் 14 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், அல்காய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய சன்னி பிரிவினர்தான் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து அடிக்கடி இதுபோன்ற தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
மொத்தம் உள்ள 18 மாகாணங்களில் 12 மாகாணங்களுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அங்கு வரும் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தை நிலைநாட்டப் போவதாக, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் இராக்கில் கால் பதித்து 10 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சர்வாதிகாரியாக திகழ்ந்த இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசேனின் சொந்த ஊரான இப்பகுதியில், 2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு மார்ச் (2013) மாதத்தில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அதிகம் பேர் உயிரிழந்தனர்.