முகப்பு
உலகம்

அதிகாரம் வாய்ந்த 500 நபர்கள் பட்டியலில் மன்மோகன் சிங், சோனியா காந்தி

இந்த உலகின் அதிகாரம் வாய்ந்த 500 நபர்கள் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட 16 இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

Updated On : 2 மே 2013, 1:55 am IST
பகிர்:

இந்த உலகின் அதிகாரம் வாய்ந்த 500 நபர்கள் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட 16 இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

பிரபலமான வெளியுறவு கொள்கை தொடர்பான இதழில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஏ.கே. அந்தோனி, சல்மான் குர்ஷித், ஆன்மிகத் தலைவர்கள் பாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ், ரா உளவு அமைப்புத் தலைவர் அலோக் ஜோஷி,

Advertisement

Advertisement

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி,

லட்சுமி மிட்டல், தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், தொழில்துறை நிபுணர் உன்னிகருணாகரா, மும்பை மேயர் சுனில் பிரபு, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் பொதுச் செயலர் சலில் ஷெட்டி உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கயானி, ஐ.எஸ்.ஐ. தலைவர் ஜாகீர் உல் இஸ்லாம், பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஹகிமுல்லா மெஷுத், திபெத் ஆன்மிக லைவர் தலாய் லாமா உள்ளிட்டோர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.