ஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் முகாபே வெற்றி?
ஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ராபர்ட் முகாபே வெற்றிபெற்றதாக அவரது ஆதரவாளர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
ஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ராபர்ட் முகாபே வெற்றிபெற்றதாக அவரது ஆதரவாளர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
முகாபேவை எதிர்த்து களமிறங்கிய மோர்கன் டிஸ்வான்கிராய்க்கும் அவரது ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கத்துக்கும் பலத்த தோல்வி என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அதிபர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் இரண்டிலுமே எங்கள் கட்சிக்குத்தான் வெற்றி என்று முகாபேவின் ஜானு-பிஎப் கட்சியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிந்துவிட்டதாகவும் அந்தந்த தொகுதி முடிவுகளை திரட்டிவருவதாகவும் தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த தேர்தல் மோசடியானது, பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. தேர்தல் முடிவை நிராகரிக்கவேண்டும் என முகாபேவை எதிர்த்து போட்டியிட்ட மோர்கன் டிஸ்வான்கிராய் தெரிவித்தார்,
அதிபர் பதவிக்கும் நாடாளுமன்றத்துக்கும் புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது.
33ஆண்டு காலமாக ஆட்சி புரியும் ராபர்ட் முகாபேவை (89) தோற்கடிக்க 3ஆம் முறையாக போட்டியிட்டார் டிஸ்வான்கிராய்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.