முகப்பு
உலகம்

சிரியாவில் தாக்குதல்: ஐநா விசாரணைக்கு அமெரிக்கா கோரிக்கை

டமாஸ்கஸ் அருகே உள்ள புறநகர் பகுதியில் சிரியா ராணுவம் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக கூறப்படுவது உண்மை என்றால் அது கண்டிக்கத்தக்கது. அது பற்றி ஐநா அமைப்பு விசாரணை நடத்தி உண்மை என்ன என்பதை கண்டறியவேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 2:15 am IST
பகிர்:

டமாஸ்கஸ் அருகே உள்ள புறநகர் பகுதியில் சிரியா ராணுவம் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக கூறப்படுவது உண்மை என்றால் அது கண்டிக்கத்தக்கது. அது பற்றி ஐநா அமைப்பு விசாரணை நடத்தி உண்மை என்ன என்பதை கண்டறியவேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் கூறுவது போல் சிரிய அரசு ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி இருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிபர் மாளிகை முதன்மை துணை செயலர் ஜோஷ் எர்னஸ்ட் தெரிவித்தார்.

ஐரோப்பிய கூட்டமைப்பும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ரசாயன ஆயுத தாக்குதலை ஏற்க முடியாது. இதுபற்றி உடனடியாக விசாரிக்கவேண்டும் என ஐரோப்பிய கூட்டமைப்பின் வெளியுறவு விவகாரப்பிரிவு தலைவர் கேத்ரின் ஆஷ்டன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.