முகப்பு
உலகம்

அமெரிக்க மருத்துவமனையில் சோனியாவிடம் சம்மன் அளிப்பு

அமெரிக்க மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, சீக்கிய உரிமைக்குழு தொடர்ந்த வழக்கில், சம்மன் அளிக்கப்பட்டது.

Updated On : 12 செப்டம்பர் 2013, 12:21 am IST
பகிர்:

அமெரிக்க மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, சீக்கிய உரிமைக்குழு தொடர்ந்த வழக்கில், சம்மன் அளிக்கப்பட்டது.

புது தில்லியில் 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்தது. அது தொடர்பான வழக்கில், காங்கிரஸ் தலைவர்களை சோனியா காந்தி காப்பாற்ற முயன்றதாக, அவர் மீது, அமெரிக்காவில் உள்ள சீக்கியர்களுக்கான மனித உரிமை அமைப்பு மற்றும் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இருவர் சார்பில், நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி பிரைன் எம்.கோகன், கடந்த 3ஆம் தேதி சோனியாவுக்கு சம்மன் வழங்க உத்தரவிட்டார். இந்நிலையில் சோனியா, நியூயார்க்கில் உள்ள ஸ்லோன்-கேட்டரிங் மெமோரியல் புற்று நோய் மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்கு வந்திருந்தார்.

Advertisement

Advertisement

அவர், புதன்கிழமை புது தில்லி திரும்புவதற்கு முன் நீதிபதியின் உத்தரவின்படி செவ்வாய்க்கிழமை இரவு சம்மன் மற்றும் புகார் பிரதிகள் அவரிடம் நேரில் வழங்கப்பட்டன. பணியில் இருந்த செவிலியர்களின் மேற்பார்வையாளர் மூலம் இவை ஒப்படைக்கப்பட்டன.

இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அமெரிக்க தலைவர் ஜார்ஜ் அபிரகாம் கூறுகையில், "சீக்கியர்களுக்கான மனித உரிமை அமைப்பு தனிப்பட்ட முறையில் சோனியாவுக்கு தொந்தரவு தர வேண்டும் என்ற உள்நோக்கோடு செயல்படுகிறது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.