தொடரும் சோகம்: இத்தாலி அருகே அகதிகள் படகு கடலில் மூழ்கி 100 பேர் பலி?
லிபியாவில் இருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஒன்று கடலில் மூழ்கி 100 பேர் பலியாகி இருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ரோம்: லிபியாவில் இருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஒன்று கடலில் மூழ்கி 100 பேர் பலியாகி இருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
லிபியாவில் இருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு இத்தாலிக்கு அகதிகள் படகு ஒன்று மத்திய தரைக்கடலில் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது லிபியாவுக்கும், இத்தாலிக்கும் இடையே 50 கி.மீ. தூரத்தில் வந்த போது படகு எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பிரான்ஸ் கடற்படை கப்பலும், இரண்டு வர்த்தக கப்பல்கள் மற்றும் விமானங்களும் மீட்பு பணியில் ஈடுபட்டன. ஆனால் நான்கு பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. 8 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.
Advertisement
Advertisement
விபத்துக்குள்ளான படகில் ஏராளமானவர்கள் பயணம் செய்துள்ளதால் 100-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
படகில் வந்தவர்கள் எந்த நாடுகளை சேர்ந்தவர்கள் என்ற விபரம் தெரியவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.