இரும்பு குழாயை துப்பாக்கி என கருதிய போலீஸார்: அமெரிக்காவில் கருப்பின இளைஞர் சுட்டுக் கொலை
குழாயின் ஒரு பகுதியை கொண்டு வந்த கருப்பின இளைஞரை துப்பாக்கி வைத்திருந்ததாக தவறாக கருதி அமெரிக்க போலீஸார் அவரை சுட்டுக் கொன்றனர்.
குழாயின் ஒரு பகுதியை கொண்டு வந்த கருப்பின இளைஞரை துப்பாக்கி வைத்திருந்ததாக தவறாக கருதி அமெரிக்க போலீஸார் அவரை சுட்டுக் கொன்றனர்.
புரூக்ளின் பகுதியில் துப்பாக்கி போன்ற ஒரு வித ஆயுததத்துடன் கருப்பின இளைஞர் ஒருவர் நடமாடுவதாக போலீஸாரின் அவசர கட்டுப்பாட்டு அறைக்கு மூன்று அழைப்புகள் வந்தது. இதையடுத்து, அந்த கருப்பின இளைஞரை சுற்றிவளைத்த போலீஸார் அவரை சரணடையும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த இளைஞர் துப்பாக்கியை இரண்டு கையால் கொண்டு சுடுவதுபோல் போலீஸாரை நோக்கி குறிவைத்துள்ளார்.
இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அந்த போலீஸார் கருப்பின இளைஞரை நோக்கி 10 முறை சுட்டனர். இதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த கருப்பின இளைஞரை சோதித்து பார்த்ததில் துப்பாக்கி இல்லாமல் இரும்பு போன்ற ஒரு குழாயை மட்டுமே அவர் கையில் வைத்திருந்தது தெரியவந்தது.
போலீஸாரின் இந்த நடவடிக்கையையடுத்து அங்கு குவிந்த பொதுமக்கள் அவர்களின் இந்த செயலுக்கு கண்டணங்களை தெரிவித்து கோஷமிட்டனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்புதான் சாக்ரமென்டோ நகரில் ஆயுதம் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் 22 வயது இளைஞர் ஸ்டீபன் கிளர்க் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், போலீஸார் நடத்திய பரிசோதனையில் அந்த இளைஞர் ஐபோன் மட்டுமே வைத்திருந்தது தெரியவந்தது. இதனை கண்டித்து அப்பகுதியில் கடந்த மார்ச் 18-ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், அதேபோன்றதொரு சம்பவம் நடைபெற்றுள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.