இளவரசர் சார்லஸுடன் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்ட மோடி
அரசு முறைப் பயணமாக ஸ்வீடன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இங்கிலாந்து சென்றுள்ளார்.
லண்டன்: அரசு முறைப் பயணமாக ஸ்வீடன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இங்கிலாந்து சென்றுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவுடனான சந்திப்புடன் மோடியின் லண்டன் பயணம் தொடங்குகிறது. இந்த பயணத்தின் போது ராணி எலிசபெத்தையும் மோடி சந்திக்கிறார்.
மேலும், 5000 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சியை இங்கிலாந்து இளவரசர் சார்லஸுடன், மோடி பார்வையிட்டார்.
Advertisement
Advertisement
அங்கு கூடியிருந்த ஏராளமான இந்திய வம்சாவளியினருடனும் மோடி பேசினார். பரத நாட்டிய நிகழ்ச்சியுடன் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.