முகப்பு
உலகம்

10,500 ஆதரவாளர்கள் கைது: வங்கதேச எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

வங்கதேசத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலையொட்டி, 10,500 எதிர்க்கட்சி ஆதரவாளர்களை அந்த நாட்டு போலீஸார் கைது செய்துள்ளதாக அந்தக் கட்சிகள்

Updated On : 26 டிசம்பர் 2018, 12:47 am IST
பிரதமர் ஷேக் ஹசீனாவை ஆதரித்து நடைபெறும் பேரணியில் அவரது கட்சியினர்.
பகிர்:


வங்கதேசத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலையொட்டி, 10,500 எதிர்க்கட்சி ஆதரவாளர்களை அந்த நாட்டு போலீஸார் கைது செய்துள்ளதாக அந்தக் கட்சிகள் செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டின.
கடந்த மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, எதிர்க்கட்சியினரின் மனதில் பயத்தை விதைக்கும் வகையில் இத்தகைய கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவை கூறின.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சினர் 7,021 பேரும், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சியைச் சேர்ந்த 3,500 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இந்த எண்ணிக்கையை காவல்துறை செய்தித் தொடர்பாளர் சொஹோல் ராணா உறுதிப்படுத்தவில்லை.
எனினும், சட்டத்தை மீறுபவர்கள் என்ற அடிப்படையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மட்டுமே கைது செய்யப்படுவதாகவும், தேவையில்லாமல் யாரும் கைது செய்யப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments